செய்திகள்

இலங்கை கிரிக்கட்டின் புதிய நிர்வாகம்: அர்ஜுன ரணதுங்க, நிஷாந்த ரணதுங்க தோல்வி:

sl cricket

2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவராக சம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கட்டின் உறுப்பினர்கள் சபையை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெற்றது.

விளையாட்டுத்துறை அமைச்சில் இந்த தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சம்மி சில்வா 83 வாக்குகளையும், ஜயந்த தர்மதாஸ 56 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.

அதேநேரம் உப தலைவர்களாக 82 வாக்குகளைப் பெற்ற ரவின் விக்ரமரத்னவும், 80 வாக்குகளைப் பெற்ற கெ. மதிவனனும் தெரிவாகியுள்ளனர்.

அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உப தலைவர் பதவிக்கு போட்டியிட்டிருந்த போதிலும் அவர் வெற்றியடையவில்லை என்பதுடன், அவர் 72 வாக்குகளையே பெற்றுள்ளார்.

மொஹான் டி சில்வா 96 வாக்குகளைப் பெற்று இலங்கை கிரிக்கட்டின் செயலாளராக தெரிவாகியுள்ளதுடன், நிஷாந்த ரணதுங்க 43 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார்.

(அ)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top