கல்வி வழிகாட்டல்

கல்வியியற் கல்லூரி விண்ணப்பங்கள் வெள்ளி நள்ளிரவு வரை..

ministry of education

கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று கல்வியமைச்சின் ஆசிரியர் கல்வி தலைமை ஆணையாளர் கே.எம்;.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.

 2016 – 2017ம் ஆண்டில் கபொத உயர்தர பரீட்சையில் சித்தியெத்திய மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும். தபால் மூலமும் இணையத்தளம் மூலமாகவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். கல்வியியல் கல்லூரிகளுக்கு இம்முறை புதிதாக எட்டாயிரம் மாணவர்களை இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார்.

மாவட்ட மட்டத்தில் பெறப்பட்டுள்ள ஆகக்கூடிய ஆற்றல்களுக்கு அமைவாக மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள். பாடசாலையிலுள்ள வெற்றிடங்களை கவனத்திற் கொண்டு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் கல்வியமைச்சின் ஆசிரியர் கல்வி தலைமை ஆணையாளர் கே.எம்;.எச்.பண்டார தெரிவித்தார்.

ஆகக் கூடுதலானோர் ஆரம்ப பயிற்சிக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top