சர்வதேசம்

ட்ரம்பின் பெயர் தனக்கு இருப்பதால் வாழ்க்கையை வெறுத்த 11 வயது சிறுவன்

joshwa trump

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க சபையின் கூட்டு அவையில் அமெரிக்க அதிபர் உரையாற்றுவார். இதனை ஸ்டேட் ஆஃப் யூனியன் உரை என்கிறார்கள். அமெரிக்காவின் பட்ஜெட் முதல் நாட்டின் பொருளாதார நிலை, தேசத்தின் முன்னுரிமைகள் உள்ளிட்டவை அதிபரின் உரையில் இருக்கும்.

செவ்வாய்க்கிழமையன்று டிரம்பின் ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையாற்றும் நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ள 13 விருந்தினர்களில் ஒரு பள்ளி சிறுவனும் இடம்பெற்றுள்ளார்.

வில்மிங்டனில் வசிக்கும் 11 வயது ஜோஷ்வா டிரம்ப்புக்கும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. ஆனால் பெயரில் டிரம்ப் என இருப்பதால் தனது மகனை முட்டாள், அறிவிலி என அவனது சக வகுப்பு நண்பர்கள் கிண்டல் செய்தனர் என்கின்றனர் அவரது பெற்றோர்கள்.

பிரதிநிதி சபை உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாஷிங்டனில் உள்ள கேபிட்டோலுக்கு அழைக்கப்பட்டனர். கேபிட்டோல் என்பது சட்டமியற்றும் குழுவின் சந்திப்புகள் நடைபெறும் இடம்.

அதிபர் மற்றும் அதிபரின் மனைவியின் அழைப்பின் பேரில் 13 சிறப்பு விருந்தினர்கள் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்ட்டுள்ளனர்.

ஜோஷ்வா டிரம்ப்பின் பெற்றோர்கள் மேகன் டிரம்ப் மற்றும் பாபி பெர்டோ கடந்த டிசம்பரில் ஏபிசி – டபிள்யூ வி பி ஐ தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், பள்ளியில் தனது மகனை கொடுமைப்படுத்தும் நிகழ்வு 2015-ல் டிரம்ப் அதிபர் தேர்தலில் நிற்கப்போவதாக அறிவித்ததில் இருந்து தொடங்கியது என்கிறார்.

தனது பெயரில் டிரம்ப் இருப்பதால் கடும் கேலி கிண்டலுக்கு உள்ளான அச்சிறுவனை அவரது பெற்றோர்கள் பள்ளியில் இருந்து நிறுத்தியிருக்கிறார்கள். அதன் பின்னர் ஒரு வருடம் வீட்டிலேயே அவர் படித்துவந்தார். பின்னர் நடுநிலை பள்ளியில் இணைந்தார்.

புதிய பள்ளியிலாவது தனது மகனுக்கு கேலி தாக்குதல்கள் நடக்காது என அவர்கள் நம்பினார்கள் ஆனால் அங்கும் அது தொடர்ந்தது.

டிரம்ப்படத்தின் காப்புரிமைAFP

”எனது மகன் அவனையே வெறுத்துக்கொள்கிறான். அவன் தனது கடைசி பெயரை வெறுக்கிறான். அவன் எப்போதும் சோகமாகவே இருக்கிறான். தனது வாழ்க்கையே வெறுத்துவிட்டான்” என ஜோஷ்வா டிரம்பின் தாய் மேகன் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆனால் வெள்ளை மாளிகையின் அறிக்கையில், ஜோஷுவாவுக்கு கடைசி பெயரில் டிரம்ப் என இருப்பதால் கேலி தாக்குதலுக்கு அவர் உள்ளானபோதும் கூட அமெரிக்காவின் முதல் குடிமகள் மற்றும் டிரம்ப் குடும்பத்தின் ஆதரவுக்கு அச்சிறுவன் நன்றியுடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

BBC.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top