பாராளுமன்றத்துக்குள் குடிநீர் போத்தல் எடுத்து வருவது இன்று (08) முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளியிலிருந்து வரும் பிரமுகர்களுக்கும், பாராளுமன்ற ஊழியர்களுக்கும் இந்த தடை அமுலில் இருக்கும் எனவும் அவ்வதிகாரி கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் எல்லா இடங்களிலும் குடிநீர் வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதனால், வெளியிலிருந்து நீர் எடுத்துவர அவசியமில்லையெனவும் குறிப்பிடப்படுகின்றது.
பாராளுமன்ற ஊழியர்களினால் எடுத்துவரப்பட்ட குடிநீர் போத்தல்கள் பாராளுமன்றக் கட்டிடத்துக்குள் எடுத்துச் செல்ல பாதுகாப்புப் பிரிவு இன்று (8) அனுமதி வழங்கவில்லையெனவும் கூறப்படுகின்றது.
dc.
