செய்திகள்

மலையகத் தமிழர்கள்: இலங்கை நாட்டில் 200 வருடங்களை கழித்த ஆண்டாக 2019:

digambaram

இன்று தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை உச்சக்கட்டத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இதே காலபகுதியில் எங்களது அமைச்சுப் பதவிகளை பணயம் வைத்தே நாம் அரசாங்கத்துடன் பேரம் பேசுதலில் ஈடுபட்டு வருகின்றோம்.

மலையகப் பெருந்தோட்ட சமூகம் சமூக ரீதியாக எந்தளவு பின்னிலையில் வைக்கப்பட்டுள்ளார்களோ அதேபோல பொருளாதார ரீதியாகவும் மிகவும் தாழ்ந்த மட்டத்திலேயே நாட்சம்பள கூலிகளாக வைக்கப்பட்டுள்ளனர். இந்த சமூகஇ பொருளாதார நிலைமைகள் இரண்டுமே தனியார் துறை வசம் வைக்கப்பட்டிருந்த நிலையில் இப்போதுதான் சமூக அபிவிருத்தி பணிகளை முன்கொண்டு செல்வதற்கான அரசாங்க ‘அதிகார சபை’ ஒன்றை தாபிப்பதற்கும் அதற்கு மலையக சமூகத்தின் கல்வியாளர்கள் குழுவொன்றை பணிப்பாளர் சபையில் உள்ளடக்குவதற்கும் வரலாற்றில் முதல் தடவையாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு வகையில் ஒட்டுமொத்த மலையக சமூகத்தின் எதிர்காலத்தை மலையக கல்வியாளர் சமூகத்தின் கைகளில் ஒப்படைக்கும் நிகழ்வாகவும் இந்த அங்குரார்ப்பண நிகழ்வை நான் பார்க்கிறேன் என மலைநாட்டு புதிய கிராமங்கள் உள்கட்டமைப்பு சமுதாய அபிவித்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்க கூடிய முதலாவது அரச அதிகாரம் கொண்ட நிறுவனமான ‘ பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபையின்’ அங்குரார்ப்பண நிகழ்வுஇ நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர முன்னிலையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் லோட்டஸ் அரங்கத்தில் கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு தலைமை வகித்து உரையாற்றியபோதே அமைச்சர் பழனி திகாம்பரம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒரு அமைச்சராக மட்டுமல்லஇ ஒரு அரசியல்வாதியாக மட்டுமல்ல இலங்கை நாட்டின் பிரஜை என்பதன் அடிப்படையில் இன்று என்வாழ்நாளில் பெறுமதிக்க நாள் ஒன்றில் கால் பதிப்பதாக உணர்கின்றேன். இந்த நாட்டிற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் துறைக்காக இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட மலையகத் தமிழ் மக்கள் இலங்கை நாட்டில் 200 வருடங்களை கழித்த ஆண்டாக இந்த 2019 அமைகின்றது. பிரித்தானிய ஆட்சியின் கீழ் பெருந்தோட்டத்துறையை இந்த நாட்டில் நிறுவுவதற்கும்இ பெரும் சாலைகளை அமைப்பதற்கும்இ ரயில் பாதைகளை அமைப்பதற்கும் எமது முன்னோர்களின் இரத்தமும் வியர்வையும் இந்த மண்ணில் சிந்தப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்னர் இலங்கை தேயிலையின் 150 ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை பலரும் பலவிதமாக கொண்டாடினார்கள். ஆனால்இ அந்த தேயிலை உற்பத்தியின் பின்னணியில் தூணாக திகழும் தொழிலாளர் மக்களை அந்தக் கொண்டாட்டங்களில் யாரும் சேர்த்துக்கொண்டதாக தெரியவில்லை. அவர்களுக்கு இந்த நாட்டில் கௌவரமான வாழ்க்கை முறை ஒன்ற அமைத்துக்கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை தானாக யாருக்கும் தோன்றவில்லை. 1931 ஆம் ஆண்டு எங்களுக்கு கிடைத்த இலங்கை குடியுரிமையை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்ததோடு பறித்த வரலாறு எங்களுடையது. 1964 ஆம் ஆண்டு எமது உறவுகளின் அரைப்பகுதியை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது இலங்கை வரலாறு. 1972 ஆம் ஆண்டு காணி உச்சவரம்பு சட்டத்தின் கீழ் எமது மக்களின் வாழ்வதாரமாகவும் நாட்டின் பொருளாதாரமாகவும் திகழ்ந்த பெருந்தோட்டத்துறையை சிதைத்த வரலாறுதான் எங்கள் மீது சுமத்தப்பட்டது. நாட்டில் ஏனைய இன மக்களுக்கு 1940 களில் இலவசக் கல்வி கிடைக்கப்பெற்றபோது 1980 ஆம் ஆண்டே எமக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. எனவே இந்த நாட்டில் ஏனைய இன மக்களோடு ஒப்பிடும்போது கல்விஇ சுகாதாரம்இ வீடு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதி வாய்ப்புகளிலும் 40இ 50 ஆண்டுகள் பின்தள்ளி வைக்கப்பட்ட சமூகமாக இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் சமூகம் காணப்படுகின்றது.

இந்தப் பின்தள்ளப்பட்ட புள்ளிவிபரங்களை ஆண்டுதோறும் பாராளுமன்றத்திலோ வேறு மேடைகளிலோ எடுத்துச் சொல்லில் கொண்டு இருப்பதால் மாத்திரம் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வந்துவிடாது என்பதே எமது அரசியல் பயணத்தின் ஆரம்பமாகிறது. அதற்கு நாங்கள் தெரிவு செய்த வழிமுறை ஆயுதப் போராட்டமல்ல. பறிக்கப்பட்ட வாக்குரிமையை அவர்களின் அரசியல் நலனுக்காக ஆட்சியாளர்கள் திரும்பவும் வழங்கியபோது அந்த ஜனநாயக வாய்ப்பைப் பயன்படுத்தி எமது மக்களுக்கான அரசியல் பாதை எது என்பதை நாம் தீர்மானித்தோம்.

தனித்தனி தொழிற்சங்க அரசியல் அமைப்புகளாக செயற்பட்ட தொழிலாளர் தேசிய சங்கம்இ மலையக மக்கள் முன்னணிஇ ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய மூன்று அமைப்புகளும் ஒன்றிணைந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பதாக ‘தமிழ் முற்போக்கு கூட்டணியாக’ ஒன்றிணைந்த அரசியல் இயக்கம் ஆனோம். 2015 ஆம் ஆண்டு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை ஜனாதிபதி ஆக்குவதற்கும் அதேபோல அதே ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் கௌரவ ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கும் எமது பங்களிப்பை வழங்கினோம். நாம் ஐக்கிய தேசிய முன்னணி யின் ஊடாக போட்டியிட்ட போதும் தமிழ் முற்போக்கு கூட்டணியாக தனியான தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்தோம். அதில் 23 அம்சங்களை உள்ளடக்கினோம்.

அத்தகைய 23 விடயங்களில் பிரதானமான ஒன்றாக அமைந்தது பெருந்தோட்டப் பகுதிகளில் அரச நிர்வாக பொறிமுறையைக் கொண்டு வருவதற்கானஇ பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூறக்கூடிய அதிகார சபை ஒன்றைத் தோற்றுவிப்பது ஆகும். தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணி இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சையும் ஒரு அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சையும் கொண்டதாக அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட கூட்டணியாக ஓரணியாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டவாறு பல்வேறு விடயங்களையும் ஒவ்வொன்றாக கையில் எடுத்து நாம் உரிய முறையில் அவற்றை வென்று எடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

1996 ல் ஆரம்பிக்கப்பட்டு 2009 ல் இல்லாமல் ஆக்கப்பட்ட தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினை ‘ மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அவிருத்தி அமைச்சாக’ புதுப் பொலிவுடன்இ புது இலக்குடன் வென்றெடுத்தோம். அதன்படி மலைநாட்டில் லயன் குடியிருப்புகளுக்கு மாற்றீடாக தனி வீடுகளைக் கொண்ட புதிய கிராமங்களை இப்போது உருவாக்கி வருகிறோம். அதற்கு 7 பேர்ச்சஸ் காணியையும் அதற்கான முழுமையான காணி உறுதியையும் வழங்கி வருகிறோம். ஒரு தனிவீட்டின் பெறுமதியை ஐந்து லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தினோம். நுவரலியா மாவட்டத்தில் ஐந்து பிரதேச சபைகளை பத்து பிரதேச சபைகளாக அதிகரித்தோம். பிரதேச செயலகங்களையும் விரைவில் 10 ஆக உயர்த்த உள்ளோம். தோட்டப் பகுதி பாடசாலைகளுக்கு அண்மித்த இரண்டு ஏக்கர் காணிகளை பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதியும் பெற்றுக் கொண்டுள்ளோம். பெருந்தோட்ட சுகாதார துறையை தேசிய மயமாக்குவதற்கான அனுமதியும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் அரச சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு தடையாக இருந்த பிரதேச சபைகள் சட்டத்திருத்தத்தை மேற்கொள்வதற்கு எம்மால் இந்த காலப்பகுதியில் முடிந்தது. அதேநாளில் பெருந்தோட்டப் பிராந்தியத்தில் புதிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் அதிகார சபை சட்டத்தையும் எம்மால் நிறைவேற்ற முடிந்தது. 2018 செப்டெம்பர் மாதம் 19 ம் திகதி சட்டம் நினைவேற்றப்பட்டபோதும் அதனையடுத்த மாதங்களில் ஏற்பட்ட அரசியல் அசாதாரண சூழல் காரணமாக எமக்கு அதிகார சபையை நிறுவிக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. எனினும் மீண்டும் நிலையான அரசாங்கம் அமையப் பெற்றதும் இப்போது அதிகார சபைக்கான பணிப்பாளர் சபையை நிறுவி இன்று அங்குரார்ப்பண நிகழ்வினை இன்று நடாத்துகின்றோம்.

இதுநாள்வரை இந்த அதிகார சபை உருவாக்கத்திற்கு தமது பூரண பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்கிய அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கும்இ கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல இன்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கௌரவ நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்களுக்கும் எனது நனிறிகள் உரித்தாகின்றது. எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன்இ பிரதிச் தலைவரும் அமைச்சருமான வி.ராதாகிருஷணன்இ பாராளுமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் குமார்இ வேலுகுமார்இ திலகராஜ் ஆகியோருக்கும் எமக்கு வாக்களித்த மக்களுக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவிக்கின்றேன். இந்த அதிகார சபை உருவாக்கத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த எனது ஆலோசகர் எம்.வாமதேவன்இ எனது அமைச்சின் முன்னாள் செயலாளர் திருமதி.ரஞ்சனி நடராஜபிள்ளை இ தற்போதைய செயலாளர் கலாநிதி. சுரேஷ் உள்ளிட்ட எனது அமைச்சின் அதிகாரிகள் அனைவருக்கும்இ இந்த செயன்முறையில் பங்கேற்ற சிவில் சமூக நிறுவனங்கள்இ தனிநபர்கள்இ சட்ட வரைஞர் திணைக்கள அதிகாரிகள்இ சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இ சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் ஆதரவளித்த அத்தனை உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள்.

இன்று தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை உச்சக்கட்டத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இதே காலபகுதியில் எங்களது அமைச்சுப் பதவிகளை பணயம் வைத்தே நாம் அரசாங்கத்துடன் பேரம் பேசுதலில் ஈடுபட்டு வருகின்றோம். மலையகப் பெருந்தோட்ட சமூகம் சமூக ரீதியாக எந்தளவு பின்னிலையில் வைக்கப்பட்டுள்ளார்களோ அதேபோல பொருளாதார ரீதியாகவும் மிகவும் தாழ்ந்த மட்டத்திலேயே நாட்சம்பள கூலிகளாக வைக்கப்பட்டுள்ளனர். இந்த சமூகஇ பொருளாதார நிலைமைகள் இரண்டுமே தனியார் துறை வசம் வைக்கப்பட்டிருந்த நிலையில் இப்போதுதான் சமூக அபிவிருத்தி பணிகளை முன்கொண்டு செல்வதற்கான அரசாங்க ‘அதிகார சபை’ ஒன்றை தாபிப்பதற்கும் அதற்கு மலையக சமூகத்தின் கல்வியாளர்கள் குழுவொன்றை பணிப்பாளர் சபையில் உள்ளடக்குவதற்கும் வரலாற்றில் முதல் தடவையாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் இலங்கை பொது நிர்வாக துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற எனது ஆலோசகராகவும் கடமையாற்றும் எம். வாமதேவன்இ இலங்கை காப்புறுதி துறையில் முதன்மை நிர்வாக அனுபவம் மிக்க தொழில் அதிபரான சந்தரா ஷாப்டர்இ பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஏ.எஸ்.சந்திரபோஸ்இ சட்டத்தரணியும் பொதுநிர்வாக முதுநிலை பட்டதாரியுமான பாலச்சந்திரன் கௌதமன் போன்றவர்களை இந்த பணிப்பாளர் சபையில் உள்வாங்கி மலையக சமூகத்தின் எதிர்கால அபிவிருத்திக்குரிய பொறுப்பினை ‘கல்வியாளர்களின்’ கைகளுக்கு ஒப்படைத்துள்ளேன். இந்த அதிகார சபை நான் அமைச்சர் என்பதற்காக எனது பெயரிலோ அல்லது எனது குடும்பத்தின் பெயரிலோ உருவாக்க கப்படவில்லை என்பதை அழுத்தமாக சொல்லிவைக்க விரும்புகிறேன்.ஒரு வகையில் ஒட்டுமொத்த மலையக சமூகத்தின் எதிர்காலத்தை மலையக கல்வியாளர் சமூகத்தின் கைகளில் ஒப்படைக்கும் நிகழ்வாகவும் இந்த அங்குரார்ப்பண நிகழ்வை நான் பார்க்கிறேன்.நாளை நான் அமைச்சுப் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த அதிகார சபையின் ஊடாக மலையக சமூகத்தின் அபிவிருத்தியை திட்டமிட்டு முன்கொண்டு செல்ல முடியும். இத்தகைய நல்ல பல திட்டங்களை கடந்த மூன்று வருடங்களாக முன்னெடுத்த எமது தமிழ் முற்போக்கு கூட்டணியினரே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினையை முன்னிறுத்தி தற்போதைய அரசாங்கத்தில் இருந்து வெளியேறவும் இப்போது தயாராக உள்ளோம். நாளை இந்தப் பொறுப்புகளில் நாங்கள் இல்லாமல் போகலாம். ஆனால்இ இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்களை கடந்த மூன்றாண்டுகளில் சாதித்துவிட்டே எமது பதவிகளை துறக்க எண்ணியுள்ளோம். இத்தகைய சமூகம் சார்ந்த விடயங்கள் போன்றே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்ணினையும் முக்கியமானது என்பதை முன்னிறுத்தியே நாம் எமது தீர்மானங்களை எடுக்கின்றோம். எமது பணிகளை சீர்தூக்கிப் பார்க்கும் சமூகமாக மலையக சமூகம் இருக்கும் என எண்ணுகின்றோம். இன்று பெருந்தோட்டத்துறை பிராந்தியத்துக்கான புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை கூறி சமூகம் சார்ந்த நற்பணிகளை எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்து விடைபெறுகின்றேன்.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top