பொலிஸ், பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு, குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், சுங்கம் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் ஆகிய நிறுவனங்களில் காணப்படும் ஊழலுக்குத் துணைபோகும் அதிகாரிகளின் உதவியினால் செயற்படும் வலையமைப்பினாலேயே மாகந்துரே மதூஷ் டுபாயிற்கும் இலங்கைக்கும் இடையிலான போதைப் பொருள் வியாபாரம் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
போதைப் பொருள் வியாபாரிகள் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள சிவப்புப் பிடியாணை, டுபாய் பொலிஸ் மற்றும் சர்வதேச பொலிஸார் (இன்டர்போல்), பரிஸ் நகர் இன்டர்போல் தலைமையகம் போன்றவற்றின் கணனி வலையமைப்புக்குள் செல்லாமல் தடுக்கும் செயல்பாட்டை இந்த வலையமைப்பு மேற்கொண்டுள்ளதாகவும் இன்றைய சகோதர வார இதழொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
dc.
