செய்திகள்

விசாரணை நடத்துமாறு மங்கள கோரிக்கை

mangala samaraweera

துபாயில் பிரபல பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துர மதூஷ் உட்பட கைது செய்யப்பட்டவர்களில் இராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று பொலிஸ்மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மாகந்துர மதூஷ் கைது செய்யப்பட்ட சமயத்தில் இராஜதந்திர கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்ட நபர் தனது ஊடக இணைப்புச் செயலாளர் என்று பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

இராஜதந்திர கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்ட நபருக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று இரண்டு ஊடகவியலாளர் சந்திப்புகளின் போதும் தான் தெரிவித்திருந்த போதும் தனக்கு எதிரான பிரச்சாரங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

அவ்வாறு தான் யாருக்கும் இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக் கொடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இந்தப் பொய்ப் பிரச்சாரம் காரணமாக தனது 30 வருட காலத்திற்கும் மேற்பட்ட அரசியல் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

ஆகவே டுபாயில் இராஜதந்திர கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்ட நபர் யார் என்பதை கண்டறிவதற்காக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ad.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top