செய்திகள்

2016 ஜனவரிக்கு முன்னர் ஓய்வூதியம் பெற்றவர்களுக்கு அக்ரஹார

nitf

2016ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு முன்னர் ஓய்வூதியம் பெற்றவர்களுக்கு அக்ரஹார காப்புறுதியைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார்..

இந்தத் தினத்திற்கு பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு தற்போது இந்தக் காப்புறுதி உரித்தாகின்றது.

குறைந்த செலவிலான தொலைபேசி வசதியை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார். ஓய்வுபெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது ஆறு இலட்சத்து 28 ஆயிரமாகும் என்றும் அவர் கூறினார்.

ஓய்வூதியம் பெற்று வெளிநாடுகளில் உள்ள அரச ஊழியர்களின் எண்ணிக்கை பெருந்தொகையாகும். வெளிநாடுகளில் தங்கியுள்ளோர் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அறிவிப்பது அவர்களது பொறுப்பாகும். இவ்வாறு அறிவிக்காமல் வெளிநாடுகளில் உள்ள ஓய்வூதியக் காரர்களுக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது. நாட்டிலுள்ள ஓய்வூதியக்காரர்களுக்கு 3 ஆயிரத்து 525 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக வழங்கப்படுகிறது. 2019ம் ஆண்டு ஓய்வூதியத்தை வழங்குவதற்காக ஓய்வூதியக்காரர்களின் குடியிருப்பு சான்றிதழ் முக்கியமானதாகும். இதற்காக வழங்கப்பட்டுள்ள கால எல்லை மார்ச் மாத்துடன் நிறைவு பெறுகிறது. மோசடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என்றும் ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் மேலும் தெரிவித்தார்;.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top