செய்திகள்

DIG லத்தீப் பற்றிய செய்தி உண்மையா?

dig latheef

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீபின் டுபாய் விஜயம் குறித்து ஊடகங்களில் நேற்று வெளியாகியிருந்த செய்தி பொய்யானது என்ற தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளன.

டீ.ஐ.ஜி. லத்தீன் டுபாயில் இருப்பதை காட்டும் சில புகைப்படங்கள் ஊடகங்களில் பரவவிடப்பட்டிருந்தன. இருப்பினும்,  இந்தப் படங்கள் மிக நீண்ட காலத்துக்கு முன்னர் எடுக்கப்பட்டவை என உறுதியாகியுள்ளன.

கடந்த 2013 ஆம் ஆண்டு டுபாயில் நடைபெற்ற சர்வதேச மாநாடொன்றுக்காக அப்போதைய  பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் ஊடாக ஸ்ரீ லங்கா பொலிஸ் திணைக்களத்துக்கு அழைப்பிதழொன்று கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த மாநாட்டில் அப்போதைய பொலிஸ் மா அதிபரின் பரிந்துரையின் பேரில் அப்போது பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த எம்.ஆர். லத்தீபே கலந்துகொண்டுள்ளார்.

இவருக்கு டுபாய் நாட்டின் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதுடன், இம்மாநாட்டில் சிறப்பரையும் இவரே ஆற்றியுள்ளார்.

தற்பொழுது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படங்கள், அப்போது மாநாட்டில் எடுக்கப்பட்டவை என தேசிய சகோதர ஊடகமொன்று நடாத்திய தேடல் ஒன்றில் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் டுபாயில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்காக விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம். ஆர். லத்தீப் துபாய் சென்றுள்ளதாக புகைப்படங்களுடன் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலக தலைவர்களில் ஒருவருமான மாகந்துரே மதூஷ் மற்றும் அவரது சகாக்கள் உள்ளிட்டோர்  தொடர்பில் துபாயில் முன்னெடுத்து வரும் விசாரணைகளில் இலங்கை சார்பில் கலந்துகொள்வதற்கே அவர் அங்கு சென்றுள்ளதாகவும் சில ஊடகங்கள் சுட்டிக்காட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

dc.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top