செய்திகள்

ஒன்லைன் (online) மூலம் நடத்தப்பட்ட பரீட்சை வெற்றி

examination department

பாடசாலை பரீட்சைகளுக்காக ஒன்லைன் இணையத்தளம் மூலமாக இம்முறை மேற்கொள்ளப்பட்ட உயர்தரம் மற்றும் சாதாரண தர தொழில்நுட்ப பரீட்சை வெற்றியடைந்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் நடவடிக்கைகளை நவீனமயப்படுத்துவதற்காக 2017ஆம் ஆண்டில் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் வழிகாட்டலில் புத்திஜீவிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் சிபாரிசுகளை கொண்ட டிஜிட்டல் மய நடவடிக்கையின் கீழ் கல்வி பொது தராதர உயர்தர வகுப்பு தரம் 12 மாணவர்களுக்காக நடத்தபடும் பொது தகவல்கள் தொழில்நுட்ப பரீட்சை (GIT)  இணையத்தளம் மூலம் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரீட்சை கடந்த 11ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை நடைபெற்றது. நாடு முழுவதிலும் உள்ள 655 கணணி மத்திய நிலையங்களில் 186 000 மாணவர்கள் இந்த பரீட்சைக்கு தோற்றினர். இது இறுதி பரிசோதனை மே மாதம் நடைபெறவுள்ளது. இதில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழிகாட்டலுக்கான பயிற்சி வழங்கப்பட்டிருந்தன.

எதிர்காலத்தில் செயல்திறன் பரீட்சை கல்வி பொது தராதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் செயல்திறன் பரீட்சைகளை இவ்வாறு நடத்துவதற்கும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 (அ.த.தி)
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top