செய்திகள்

நீண்டகால பிரச்சினைகளை ஒரு நொடியில் தீர்க்க முடியாது – கல்வி அமைச்சர்

akilaviraj kariyawasam

கூடுதலான மாணவர்கள் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக பதிவாளர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். இதற்கான அமைச்சரவை ஆவணம் சமர்பிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரிவசம் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் டிஜிட்டல் வகுப்பறைகளை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய தொழிற்நுட்பத்தின் ஊடாகவே கல்வி நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றோம். அயலில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு தொழில்நுட்ப உபகரணங்களை வழங்கும் நிகழ்வு இன்று காலை கல்வி அமைச்சில் இடம்பெற்றது. கல்வி அமைச்சர் வழிகாட்டலில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 142 பாடசாலைகளுக்கு 70 மில்லியன் ரூபா பெறுமதியான மடிக்கணணிகள் பிரதி எடுக்கும் இயந்திரங்கள் அச்சு இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் இதன்போது அமைச்சரினால் வழங்கப்பட்டன.

மேல் மாகாணத்தில் 19 பாடசாலைகளுக்கும் சப்ரகமுவ மாகாணத்தில் 114 பாடசாலைகளுக்கும் தென் மாகாணத்தில் 8 பாடசாலைகளுக்கும் சப்ரகமுவ மாகாண வலயக்கல்வி அலுவலகங்கள் இரண்டுக்கும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. நேற்று நடைபெற்ற ஆசிரியர்கள் அதிபர்களின் பணி பகீஷ்கரிப்பு குறித்தும் அமைச்சர் கருத்து தெரிவித்தார். 59 ஆயிரம் அதிபர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். 750 ரூபாவாக இருந்த கொடுப்பனவை 6500 ரூபா வரையில் அதிகரித்துள்ளோம். அரசாங்க சேவையில் ஆகக் கூடுதலான ஊழியர்கள் கல்வி துறையிலே பணி ஆற்றுகின்றனர்.

2015ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர் ஒருவரின் சம்பளம் 16 100 ரூபாவாகும். தற்பொழுது இந்த தொகை 33 700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 33 சதவீத அதிகரிப்பாகும். நீண்டகாலமாக நிலவிவரும் பிரச்சினைகளை ஒரு நொடியில் தீர்க்க முடியாது என்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் சுட்டிகாட்டினார்.

 (அ.த.தி)
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top