செய்திகள்

பயணிகளின் பஸ்களை முற்றுகை இட நடவடிக்கை

bus with decaration

பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு எச்சரிக்கை ஓசைகளை ஹோன் மற்றும் பல்வேறு வர்ணங்களைக் கொண்ட மின்குமிழ்களை ஒளிரவிட்ட வண்ணம் செல்லும் பயணிகளின் பஸ்களை முற்றுகை இடுவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வாகன அலுவல்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.

பஸ்கள் மாத்திரம் அன்றி இவ்வாறான ஏனைய வாகனங்களுக்கு எதிராகவும் சட்டரீதியிலான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வாகனங்களில் இவ்வாறான பாகங்களை பொறுத்துவது தொடர்பில் வாகன உரிமையாளர்களை போன்று சாரதிகளுக்கும் பொறுப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பல்வேறு ஓசைகளை எழுப்பிய வண்ணமும் பல்வேறு வர்ணங்களை கொண்ட மின்குமிழ்களை ஒளிர விட்ட வண்ணம் செல்லும் பஸ்களை பரிசோதனை செய்யும் இந்த நடவடிக்கை நாடு முழுவதிலும் பிரதேச மட்டத்தில் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top