செய்திகள்

வங்கி அட்டை மோசடி – கம்பளையில் ஆசிரியர் ஒருவர் கைது

arrest

மற்றொரு நபரின் வங்கி அட்டையைப் பயன்படுத்தி பணத்தை மோசடியாகப் பெற்றதுடன் பொருட்களையும் கொள்னவு செய்த ஆசிரியர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக கம்பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை கம்பளை மாவட்ட நீதிவான் ஸ்ரீநித் விஜேசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, அந்நபரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

சில தினங்களுக்கு முன் தேவை ஒன்றின் காரணமாக நிமித்தமாக கம்பளை நகருக்கு வருகைத் தந்த கெலி ஓயா பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது வங்கி அட்டையைத் தவற விட்டுச் சென்றுள்ளார்.

இதன்போது மேற்படி அட்டையைக் கண்டெடுத்த கம்பளைப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபரான ஆசிரியர் அட்டையில் பணம் இருக்கின்றதா என பரிசீலிப்பதற்காக நண்பனிடம் குறித்த அதனைக் கொடுத்துள்ளதாகவும் இதன்போது நண்பன் அந்த அட்டையைப் பயன்படுத்தி 5000 ரூபாவுக்குப் பொருட்களை கொள்வனவு செய்து விட்டு அட்டையைத் திருப்பிக் கொடுத்துள்ளார்.

இதனைப் பெற்றுக்கொண்ட சந்தேக நபர் தனக்கு மிக பரிச்சயமான எரிபொருள் நிலையத்துக்குச் சென்று 5000 ரூபாவுக்கு எரிபொருள் நிரப்பியதற்கான சீட்டைத் தயாரிக்கச் செய்து அதில் 4500 ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். பின்னர் மீண்டும் குறித்த அட்டையின் ஊடாக 5000 ரூபாவுக்கு உலர் உணவுகள் கொள்வனவு செய்துள்ளதாக சந்தேக நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

கடந்த வாரமும் மருத்துவ தாதி ஒருவரின் வங்கி அட்டையைப் பயன்படுத்தி மருத்துவ மாது ஒருவர் சட்ட விரோதமான முறையில் பொருட்களை கொள்வனவு செய்துவிட்டு குறித்த வங்கி அட்டையினை ஆற்றுக்குள் வீசியமை தொடர்பாக கம்பளை பொலிஸார் குறித்த மருத்துவ மாதுவை கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

dc.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top