செய்திகள்

வைத்தியர்கள், சட்டத்தரணிகள் உட்பட 527 பேர் கைது

arrest

மேல் மாகாணத்தில் பொலிஸார் இரண்டு தினங்களாக மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 527 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சோதனை நடவடிக்கை நள்ளிரவு முதல் அதிகாலை வரை இடம்பெற்றதாக பொலிஸ் தலைமைக் காரியாலயம் தெரிவிக்கிறது. களியாட்ட நிகழ்வுகளுக்கு சென்றவர்கள் மதுபோதையுடன் வாகனங்களை செலுத்துவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பல சட்டத்தரணிகள், வைத்தியர்கள் மற்றும் முன்னணி வர்த்தகர்களும் உள்டங்குகின்னர். இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை அடுத்த வரும் சில தினங்களில் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமைக் காரியாலயம் மேலும் தெரிவித்துள்ளது. இதுபோன்ற விசேட பொலிஸ் நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் இடம்பெறும் என்று பொலிஸ் தலைமையம் தெரிவித்துள்ளது.

(அ)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top