சர்வதேசம்

உலகில் முதல் 5ஜி அமைப்பு தென் கொரியாவில் அறிமுகம்

5g in south korea

உலகில் முதல் முறையாக நாடு முழுவதும் 5ஜி சேவையை தென் கொரியா வழங்க ஆரம்பித்துள்ளது.

கடந்த புதன்கிழமை இரவே தென் கொரியா முழுவதும் 5ஜி சேவை ஆரம்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

எஸ்.கே டெலிகொம், கே.டி எல்.ஜி யூபிளஸ் ஆகிய நிறுவனங்கள் இச்சேவையை வழங்குகின்றன. அமெரிக்காவின் வெரிசோன் நிறுவனம், 5ஜி சேவையை அந்நாட்டில் ஆரம்பித்ததை அடுத்தே, தென் கொரியா அவசர அவசரமாக இரவில் இச்சேவையை ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஒலிம்பிக் பனிச்சறுக்கில் தங்கம் வென்ற வீராங்கனையான கிம் யுனா மற்றும் எக்சோ பேண்ட் இசைக்குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர் உலகின் முதல் 5ஜி வாடிக்கையாளர்களாக இருப்பார்கள் என எஸ்.கே. டெலிகொம் கூறியுள்ளது.

இந்தப் புதிய கட்டமைப்பு அதிவிரைவுத் தகவல் பரிமாற்றத்தை வழங்கும். மக்களின் அன்றாட வாழ்க்கையைப் புதிய தொழில்நுட்பம் வெகுவாக மேம்படுத்தும்.

புதிய கைபேசிக் கட்டமைப்பு தென் கொரியாவின் பொருளாதாரத்திலும் உந்துதலாக விளங்கும் என்று கருதப்படுகிறது. (தி)

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top