செய்திகள்

போதையில் வாகனம் செலுத்துவோர் விசாரணை முடியும் வரை விளக்கமறியலில்..

drunk and driving 2

புத்தாண்டுக் காலப்பகுதியில் மதுபானம் அருந்தி வாகனத்தை செலுத்தும் சாரதிகள் மற்றும் வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளைக் கைது செய்வதற்கான விசேட பொலிஸ் நடவடிக்கை முன்னெடுககப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை கடந்த முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது. இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் போதையில் வாகனத்தை செலுத்திய 289 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் போதையுடன் வாகனத்தை செலுத்திய சாரதிகளின் எண்ணிக்கை 534 ஆகும். போதையில் வாகனங்களை செலுத்துவதற்கான குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் சாரதிகள் விசாரணை நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என்று வாகனங்கள் தொடர்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். குறிப்பிட்ட வாகனங்களையும் பொலிஸார் பொறுப்பேற்பர். போதையில் வாகனத்தை செலுத்துவோர் தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டவிதிகள் கடுமையாக்கப்படும் என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார். போதையில் வாகனத்தை செலுத்தும் மற்றும் வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளை கைது செய்யும் விசேட நடவடிக்கை 24 மணித்தியாலங்களும் இடம்பெறும். இதற்காக சுமார் எட்டாயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top