சர்வதேசம்

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி – 1,112 பேரை கைது செய்ய உத்தரவு

erdur khan

துருக்கியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தாயீப் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சித்தது. ஆனால் மக்கள் ஆதரவுடன் ஜனாதிபதி அந்த புரட்சியை முறியடித்தார்.

அமெரிக்காவில் வசித்துவரும் துருக்கியை சேர்ந்த மத குரு பெதுல்லா குலென் தான், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு காரணம் என தாயீப் எர்டோகன் குற்றம் சாட்டினார். அதனை தொடர்ந்து அவர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தொடங்கினார்.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை பொலிஸ் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் என 77 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில், தற்போது மத குரு குலனுடன் தொடர்புடைய 1,112 பேரை கைது செய்ய துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. பொலிஸ் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.

ad.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top