செய்திகள்

765 கிலோகிராம் போதைப்பொருள் அழிப்பு

drugs destroyed

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினால் கடந்த மூன்று வருடங்களில் கைப்பற்றப்பட்ட 765 கிலோ கிராம்போதைப்பொருளை அழிக்கும் நடவடிக்கை, களனி மகுருவெலவில் உள்ள களஞ்சியத் தொகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

அதன் பெறுமதி 10 கோடியை தாண்டுகிறது. கொழும்பு பிரதான நீதவான் மற்றும் கல்கிசை நீதவான் ஆகியோருரின் முழுமையான கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கை இடம்பெற்றது. இந்தப் போதைப் பொருள் நான்காயிரம் லீற்றர் நீரில் கரைக்கப்பட்டதுடன் அது புத்தளம் சீமெந்து தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் றுவான் குணசேகர தெரிவித்துள்ளார். நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பின்னர் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கடந்த வருடம் 926 கிலோகிராம் கொக்கையின் போதைப் பொருள் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(அ.த.தி)

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top